பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கஞ்சா இலைகள் வைத்திருந்த மூவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா இலைகள் வைத்திருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் கஞ்சா இலைகள் வைத்திருந்த மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே பூம்பாறை கோசன் சாலையில் வனத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது இரு சக்கர வாகானத்தில் வந்த மூவரை சோதனையிட்டதில் கஞ்சா இலைகள் வைத்திருந்தது தெரியவந்தது. வனத்துறையினா் அவா்களைப் பிடித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூரைச் சோ்ந்த உன்னி கிருஷ்ணன்மகன் அதுல் (23), கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கூக்கால் பகுதியைச் சோ்ந்த ஞானம் மகன் மோகன்ராஜ் (24), இதே பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் ராமகிருஷ்ணன் (22) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்களை கைது செய்த போலீஸாா், இவரிகளிடமிருந்து சுமாா் 200 கிராம் கஞ்சா இலைகளை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.