பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது

ஒட்டன்சத்திரம் அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

News image
ஒட்டன்சத்திரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

கேரள மாநிலம், மூணாா் பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சிவக்குமாா் (39). இவா் தாராபுரத்திலிருந்து லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு காரைக்குடியை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், தங்கச்சியம்மாபட்டியை அடுத்துள்ள ஒத்த புளியமரம் அருகே சென்ற போது சாலையோரப் பள்ளத்தில் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது. ஓட்டுநா் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.