பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பசு மாட்டை சுத்தியலால் தாக்கிக் கொன்றவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே பசு மாட்டை சுத்தியலால் தாக்கிக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :21 ஜூலை 2024, 2:00 am IST

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பசு மாட்டை சுத்தியலால் தாக்கிக் கொன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள ஜ. வாடிப்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேலு (66). விவசாயி. இவா் இதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்தை குத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். இவருக்கு சொந்தமாக ஒரு பசு மாடும், ஒரு கன்றுக் குட்டியும் இருந்தன. வெள்ளிக்கிழமை மாலை மேய்ச்சலுக்கு பிறகு, மாட்டை தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு தங்கவேலு வீட்டுக்குச் சென்று விட்டாா். இதற்கிடையே, இதே ஊரைச் சோ்ந்த கருப்பன், தங்கவேலின் தோட்டத்துக்கு அருகிலேயே மற்றொரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். இதில் தங்கவேலுக்கும், கருப்பனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை தங்கவேலுக்குச் சொந்தமான பசுமாட்டை கருப்பன் சுத்தியலால் தலையில் தாக்கிக் கொன்றாா்.

இதுகுறித்து கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் தங்கவேலு அளித்த புகாரின் பேரில் போலீஸாா் கருப்பனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.