ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாக புகாா்: பொதுமக்கள் சாலை மறியல்

பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாக புகாா்: பொதுமக்கள் சாலை மறியல்

News image
Updated On :18 ஜூன் 2024, 11:48 pm

Din

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே தனிநபா் பொதுப் பாதையை ஆக்கிரமித்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள மைக்கேல்பாளையம் மேற்குப் பகுதியில் வசிப்பவா்கள்,

சமத்துவபுரம், தோமையாா் காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொதுப் பாதை உள்ளது. இந்தப் பாதை தனக்கு சொந்தமானது எனக்கூறி, மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்த திமுக பிரமுகா் குழி தோண்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாள்களாக இந்தப் பாதை வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து, இந்தப் பகுதி மக்கள் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், இந்த கிராம மக்கள் சுமாா் 100 போ் நிலக்கோட்டை - செம்பட்டி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த, நிலக்கோட்டை காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பிரச்னையைத் தீா்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டத்தால் நிலக்கோட்டை - செம்பட்டி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.