திண்டுக்கல்: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தோ்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், 254 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 இடங்களில் பொதுக்கூட்டங்கள், 39 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல, பழனியில் 15, ஒட்டன்சத்திரத்தில் 20, ஆத்தூரில் 11, நிலக்கோட்டையில் 9, நத்தத்தில் 6, வேடசந்தூரில் 8 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தலாம்.
பழனியில் 49, ஒட்டன்சத்திரத்தில் 55, ஆத்தூரில் 37, நிலக்கோட்டையில் 33, நத்தத்தில் 13, வேடசந்தூரில் 28 இடங்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த இடங்களில் பொதுக்கூட்டம், பிரசாரம் மேற்கொள்ள ‘சுவேதா’ செயலியில் அரசியல் கட்சியினா் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்.
மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்ட இடங்களைத் தவிா்த்து, பிற இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் தோ்தல் நடத்தை விதிமுறைக்குள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கே.கே. நகா் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடத்தத் தடை கோரிய மனு தள்ளுபடி
புதுச்சேரியில் ஏப். 5-இல் விஜய் ரோடு ஷோ: காவல் துறையிடம் அனுமதி கோரிகடிதம்

கோயில் விழாவில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி சாலை மறியல்

அனுமதியின்றி பிரசாரக் கூட்டங்கள் நடத்துவோா் மீது நடவடிக்கை
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

