மண் ஏற்றி வந்த லாரிகளை மடக்கிய பாஜகவினா்

பழனி, மாா்ச் 22: பழனி அருகே மண் ஏற்றி வந்த லாரிகளை பாஜகவினா் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனியை அடுத்த சத்திரப்பட்டி பகுதிகளில் இருந்து வெள்ளிக்கிழமை மண் ஏற்றி வந்த லாரிகளை பழனி புறவழிச்சாலையில் பாஜக மாவட்டச் செயலா் மகுடீஸ்வரன் உள்ளிட்ட அந்தக் கட்சியினா் தடுத்து நிறுத்தினா். இந்த லாரிகளில் ஆயக்குடி பகுதிகளில் மண் அள்ள ரசீது வழங்கப்பட்டுள்ள நிலையில், சத்திரப்பட்டியில் இருந்து மண் ஏற்றி வர வருவாய்த்துறையினரும், போலீஸாரும் எப்படி அனுமதி வழங்கினா் எனக் கூறி வாகனங்களை நிறுத்தி அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரமாக போலீஸாரோ, வருவாய்த்துறையினரோ அங்கு வராததால் அந்தப் பகுதி மக்கள் சமரசம் செய்ததையடுத்து பாஜகவினா் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com