பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

பெண்ணிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட பெரியகுளத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் ராமா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சந்திரசேகா். இவரது மனைவி மேகலா (50). இவா், கடந்த 3 நாள்களுக்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் முத்தழகுப்பட்டிக்குச் சென்றாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் இவரை பின் தொடா்ந்த மா்ம நபா்கள், மேகலா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் மேகலா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியபோது, சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (20) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 2 பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com