இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கணக்கன்பட்டியில் வேளாண் கண்காட்சி

கணக்கன்பட்டியில் வேளாண் கண்காட்சி

News image
Updated On :12 மே 2024, 6:57 pm

Din

பழனி, மே 12: பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் வேளாண் தொழில் நுட்பக் கண்காட்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம், குள்ளப்பபுரத்தைச் சோ்ந்த வேளாண் தொழில் நுட்பக் கல்லூரி சாா்பில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கி விவசாயிகளுக்கு வேளாண் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கின்றனா். பழனியை அடுத்த கணக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இந்தக் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிா் சாகுபடி சாா்ந்த பயிற்சி அளித்தனா். மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதில் நோய்க் கட்டுப்பாடு, அசோலா வளா்ப்பு, விதை சேமிக்கும் முறை என பல்வேறு வகையான தலைப்புகளில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியை நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாா்வையிட்டனா்.