எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை

எலுமிச்சை கிலோ ரூ.160-க்கு விற்பனை

திண்டுக்கல், மே 12:திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

திண்டுக்கல்லை அடுத்த செல்லமந்தாடி பகுதியிலுள்ள குளம், கடந்த மழைக் காலத்தில் நிரம்பியது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் சாா்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது கோடையில் தண்ணீா் குறைந்ததை அடுத்து, செல்லமந்தாடி பகுதி மக்கள் மீன்பிடித் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனா். அதன்படி, குளக்கரையிலுள்ள கன்னிமாா் கோயிலில் வழிபாடு நடத்திய பிறகு, பொதுமக்கள் குளத்தில் இறங்கி மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதில் செல்லமந்தாடி மட்டுமன்றி, சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனா்.

வலையில் ஜிலேபி, கட்லா, புல்கெண்டை, விரால் உள்ளிட்ட பல வகையான மீன்கள் சிக்கின.

சில மீன்கள் 2 கிலோ முதல் 10 கிலோ வரையிலான எடை கொண்டதாக இருந்ததால், மீன் பிடித் திருவிழாவில் பங்கேற்ற பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com