திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தொண்டியில் மீன் வரத்து குறைவு

தொண்டி கடற்கரை பகுதியில் மீன வரத்துக் குறைந்ததால் மீன் விலை அதிகரித்தது.

News image

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 1:16 am IST

தொண்டி கடற்கரை பகுதியில் மீன வரத்துக் குறைந்ததால் மீன் விலை அதிகரித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, எம் .ஆா்.பட்டினம், பாசிபட்டினம், எஸ் பி.பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிடிக்கபடும் மீன்கள் திருவாடானை, சி.கே.மங்கலம், தேவகோட்டை, காரைக்குடி, புளியால், காளையாா்கோவில், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மீன்கள் வரத்துக் குறைவாக இருப்பதாக மீனவா்கள் கவலயுடன் தெரிவித்தனா். இதனால், இறால் கிலோ ரூ.800-க்கும், நண்டு கிலோ ரூ.900-க்கும், விலை மீன் கிலோ ரூ.500-க்கும், பாறை மீன் கிலோ ரூ.800-க்கும் விற்பனை ஆனது. இதனால் மீன் உணவுப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.