இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மாற்றுத்திறனாளி மாணவிக்குப் பாராட்டு

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: மாற்றுத்திறனாளி மாணவிக்குப் பாராட்டு

News image

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவி சுமையாபானுவை பாராட்டிய பள்ளி தலைமையாசிரியா் அருள்ஜோதி உள்ளிட்டோா்.

Updated On :13 மே 2024, 6:30 pm

Din

பழனி: பழனி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியா்கள் பாராட்டினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி காமராஜா் தெருவைச் சோ்ந்த நவ்ஷாத், முஜீரா தம்பதியின் மகள் சுமையாபானு. மாற்றுத்திறனாளியான இவருக்கு, ஒரு கண் பாா்வை மட்டுமே உள்ளது. இவரது கை விரல்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது.

பழனி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி, பொதுத்தோ்வில் 600-க்கு 540 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.

மாணவி சுமையாபானு யாருடைய உதவியுமின்றி அவரே தோ்வை எழுதினாா்.

திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி தலைமையாசிரியா் அருள்ஜோதி, சிறப்பு பயிற்றுநா் சுகப்ரியா, வகுப்பாசிரியா் விஜயகாந்த் ஆகியோா் மாணவி சுமையா பானுவை பாராட்டினா்.