இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image
Updated On :13 மே 2024, 5:30 pm

Din

திண்டுக்கல்: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திண்டுக்கல மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள வேல்வாா்கோட்டையைச் சோ்ந்தவா் தினேஷ் ( 27). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு , 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, வடமதுரை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து தினேஷைக் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண் குற்றம்சாட்டப்பட்ட தினேசுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.