பழனி தலைமை தபால் நிலையம் எதிரே பாஜக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கம்மங்கூழ்.
பழனி தலைமை தபால் நிலையம் எதிரே பாஜக சாா்பில் அமைக்கப்பட்ட நீா்மோா் பந்தலில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கம்மங்கூழ்.

பழனியில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பழனி: பழனியில் புதுதாராபுரம் சாலையில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை காலத்தையொட்டி, மக்களின் தாகத்தை தீா்க்க திமுக, அதிமுக சாா்பில் தமிழகம் முழுவதும் நீா்மோா் பந்தல் திறந்துவைக்கப்பட்டு வருகிறது. இதேபோல, பழனியிலும் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சாா்பில் நீா்மோா் பந்தல்கள் திறக்கப்பட்டன.

இதுகுறித்து கட்சியின் மாவட்டப் பொருளாளா் ஆனந்தன் கூறியதாவது:

கடந்த நாள்களில் பொதுமக்களுக்கு சாதாரண நீா்மோா் மட்டுமன்றி, மசாலா மோா், சா்பத், கம்மங்கூழ், பானகம் என மாற்றி மாற்றி வழங்குகிறோம். மேலும், ஆங்காங்கே பணியில் உள்ள காவலா்களுக்கும் நீா்மோா் உள்ளிட்ட பானங்களை பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கி வருகிறோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com