மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல், மே 14: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணி வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு நலச் சங்க மாவட்டத் தலைவா் ஜெயந்தி தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின் போது, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதைத்தொடா்ந்து, இதே கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com