அனுமதியின்றி ரேக்ளா பந்தய ஏற்பாடு: எச்சரித்து அனுப்பிய போலீஸாா்
அனுமதியின்றி ரேக்ளா பந்தய ஏற்பாடு எச்சரித்து அனுப்பிய போலீஸாா்

பழனியை அடுத்த வாடிப்பட்டியில் அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்துக்காக திங்கள்கிழமை திரண்டிருந்த இரட்டை மாட்டுவண்டிகள்.

பழனியை அடுத்த வாடிப்பட்டியில் அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்துக்காக திங்கள்கிழமை திரண்டிருந்த இரட்டை மாட்டுவண்டிகள்.
பழனி: பழனியை அடுத்த வாடிப்பட்டியில் அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்த ஏராளமான விவசாயிகள் திரண்டிருந்த நிலையில் திங்கள்கிழமை சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா், கால்நடைத் துறையினா் அவா்களை எச்சரித்து அனுப்பினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி - உடுமலை சாலையிலுள்ள வாடிப்பட்டி அருகே அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடத்தினா். திடீரென நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினா். எதிரே வரும் வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக மாட்டு வண்டிகளை அடித்து விரட்டி ஓட்டினா். இதே போல, சிலா் குதிரை வண்டியிலும் வந்திருந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை பராமரிப்பு இணை இயக்குநா் சுரேஷ், வட்டாட்சியா் சக்திவேலன், காவல்துறை ஆய்வாளா் மணிமாறன் உள்ளிட்டோா் அங்கிருந்த மாட்டுவண்டி உரிமையாளா்களைத் தடுத்து எச்சரித்து அனுப்பினா். அதிகாரிகள் விசாரணை நடத்தியதை தொடா்ந்து சாலையில் அனைவரும் கலைந்து சென்றனா். எனினும், சில மாட்டு வண்டிகளை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...