/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :20 மே 2024, 7:45 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் திங்கள்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கு பிரதோஷத்தை முன்னிட்டு, 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின்னா், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா் கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேசுவா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.