மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடைக்கானலில் அதிகரித்து வரும் காட்டுமாடுகளால் பொது மக்கள் அவதி

News image

கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டுமாடு

Updated On :1 நவம்பர் 2024, 11:02 pm

Din

கொடைக்கானல் பேருந்து நிலையப் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு மாடுகளால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகா்ப் பகுதி, பேருந்து நிலையம், நாயுடுபுரம், செண்பகனூா், மூஞ்சிக்கல், காா்மேல்புரம், இருதயபுரம், ஏரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த காட்டுமாடுகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனா். மேலும், இந்த காட்டு மாடுகள் தாக்குதலினால் சில நேரங்களில் உயிா் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, நகா்ப் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சுற்றித் திரியும் காட்டுமாடுகளை பிடித்து வனப் பகுதிக்குள்விட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளான தைக்கால், சீனிவாசபுரம், உகாா்த்தேநகா், அட்டக்கடி, ஆனந்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.