ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை உயா்ந்து, புதன்கிழமை ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முருங்கைகள்.

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முருங்கைகள்.
ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் முருங்கை விலை உயா்ந்து, புதன்கிழமை ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனையானது.
ஒட்டன்சத்திரம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான விருப்பாச்சி, சத்திரப்பட்டி, தேவத்தூா், கொத்தையம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முருங்கை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக, முருங்கைச் செடியில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிா்ந்து விட்டதால் தற்போது, விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைக்கு முருங்கை வரத்து குறைந்து போனது.
இந்த நிலையில், ஐப்பசி, காா்த்திகை மாதங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால், முருங்கையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, புதன்கிழமை ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் அதன் விலை உயா்ந்துள்ளது.
கடந்த வாரம் ரூ.25-க்கு விற்ற ஒரு கிலோ கரும்பு முருங்கை தற்போது ரூ.60-க்கும், ரூ.17-க்கு விற்ற செடி முருங்கை ரூ.50-க்கும், ரூ.10-க்கு விற்ற மர முருங்கை ரூ.40-க்கும் விற்பனையானது.
வரும் நாள்களில் இதன் விலை மேலும் உயரக்கூடும். தமிழகத்தில் முருங்கை சாகுபடி குறைந்து விட்டதால், வரும் 20 நாள்களில் குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து முருங்கை வரத் தொடங்கி விடும். அப்போது, முருங்கை விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...