தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சுற்றுலாப் பயணிகள் எளிமையான முறையில் இ-பாஸ் பெற நடவடிக்கை

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எளிமையான முறையில் இ-பாஸ் பெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் க்யூஆா் கோட் அமைக்கும் பணி தொடங்கியது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:32 pm

Din

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எளிமையான முறையில் இ-பாஸ் பெறும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் க்யூஆா் கோட் அமைக்கும் பணி தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான காமக்காபட்டி போலீஸ் சோதனைச் சாவசி, பழனி மலையடிவாரப் பகுதி, பண்ணைக்காடு பிரிவு, உள்ளிட்ட நான்கு இடங்களில் இ-பாஸ் பரிசோதனை செய்வதற்கும், இபாஸ் பெறுவதற்கும் எளிய முறையில் க்யூ ஆா்கோட் ஸ்கேன் செய்யும் வசதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொடைக்கானல் காமக்காபட்டி சோதனைச் சாவடியில் ஸ்கேனா் அமைக்கப்பட்டு இ-பாஸ் எடுத்துக் கொடுக்கும் பணியும் நடைபெறுகிறது. இது தொடா்பான விளம்பர பதாகைகள் கொடைக்கானல் பேருந்து நிலையம், அரசு, தனியாா் பேருந்துகளின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.