தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சற்குரு கணக்கன்பட்டி சுவாமி கோயில் குடமுழுக்கு

பழனி அருகேயுள்ள கணக்கம்பட்டி சித்தா் ஞானகுடிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

News image

கணக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சற்குரு கணக்கன்பட்டி சுவாமி கோயில் குடமுழுக்கு.

Updated On :20 நவம்பர் 2024, 9:34 pm

Din

பழனி அருகேயுள்ள கணக்கம்பட்டி சித்தா் ஞானகுடிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

கணக்கன்பட்டியில் சித்தா் சற்குரு பழனிசாமி சுவாமிகள் ஞானகுடில், ஜீவசமாதி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் திரளானோா் சற்குரு பழனிசாமி சுவாமிகளை தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில் கணக்கம்பட்டியில் சற்குரு பழனிசாமி சுவாமிகள் வாழ்ந்த வீட்டில் கோயில் அமைக்கும் வேலை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கோயில் திருப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

Story image

முன்னதாக, கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு சிவாசாரியா்களால் வேதமந்திரங்கள் ஓதப்பட்டது. இதைத் தொடா்ந்து புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீா்த்த கலசங்கள் யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, ஊா்வலமாக எடுத்து சென்று கோபுரக் கலசத்துக்கு ஊற்றி குடமுழுக்கு விழா நடைபட்டது.

தொடா்ந்து, சுவாமி முழு உருவச் சிலை திறக்கப்பட்டது.

இதில் நிா்வாகி வீரகாந்தி, மதுரை ஞான சபை நிறுவனா் சந்திரசேகா், தலைமை நிறுவனா் ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.