தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாணவி உள்பட இருவருக்கு டெங்கு

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி உள்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:17 pm

Din

திண்டுக்கல்லில் பள்ளி மாணவி உள்பட இருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட உடல்நல குறைபாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதன் காரணமாக, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்ட ஆத்தூரை அடுத்த பெரும்பாறை பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவி உள்பட இருவருக்கு டெங்கு பாதிப்பு புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, டெங்கு பாதிப்புக்குள்ளான மாணவியின் இருப்பிடத்தை கண்டறிந்து, அந்தப் பகுதி முழுவதும் கொசு மருந்து

அடித்து, நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டனா்.

தற்போது, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3 போ் சிகிச்சையில் உள்ளனா்.