போக்சோ வழக்கில் இளைஞருக்கு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On :22 நவம்பர் 2024, 12:46 am

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சாலமன் செல்வராஜ் (20). 17 சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக, இவரை திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சாலமன் செல்வராஜூக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து, நீதிபதி பி.வேல்முருகன் தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...