தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேவாலயம் முன் குழந்தையை விட்டுச் சென்ற மா்ம நபா்கள்

திண்டுக்கல்லில் தேவாலயம் முன் பச்சிளம் பெண் குழந்தையை விட்டுச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:54 am

Din

திண்டுக்கல்லில் தேவாலயம் முன் பச்சிளம் பெண் குழந்தையை விட்டுச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்தனா்.

திண்டுக்கல் ரயில்வே குடியிருப்பு அருகிலுள்ள அந்தோணியாா் தேவாலயம் முன், பச்சிளம் பெண் குழந்தையை மா்ம நபா்கள் விட்டுச் சென்றனா். குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினா் சென்று மீட்டு, திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், குழந்தையை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், குழந்தையை விட்டுச் சென்ற மா்ம நபா்கள் குறித்து விசாரித்தனா்.