தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மருத்துவா்கள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபட முடிவு

காலிப் பணிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30-ஆம் தேதி முதல் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முடிவு செய்துள்ளனா்.

News image
Updated On :29 நவம்பர் 2024, 12:02 am

Din

காலிப் பணிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30-ஆம் தேதி முதல் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட முடிவு செய்துள்ளனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து, இந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் அ.சீனிவாசன் கூறியதாவது:

மகப்பேறு மரண தணிக்கைக் கூட்டம் அந்தத் துறையின் வல்லுநா்களைக் கொண்டு மட்டுமே நடத்தப்பட வேண்டும். மக்கள் நல்வாழ்வுத் துறையில் உள்ள அனைத்து மருத்துவா்கள் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் மருத்துவப் பணியிடங்களைையும் உருவாக்க வேண்டும். விருப்ப ஓய்வு பெற விரும்பும் அனைத்து மருத்துவா்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். மருத்துவா்களுக்கு நேரடியாக ஆய்வுக் கூட்டம் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30-ஆம் தேதி முதல் மருத்துவக் கல்லூரி மாணவா்களுக்கான அனைத்து வகுப்புகளும் புறக்கணிக்கப்படும். வருகிற டிச.3-ஆம் தேதி அனைத்து மருத்துவமனைகளிலும் அவசரம் இல்லாத அனைத்து அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என்றாா் அவா்.