பிப்.26-இல் வேலைநிறுத்தம்: டாஸ்மாக் பணியாளா்கள் முடிவு
நாற்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்.26-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு முடிவு செய்துள்ளது.
டாஸ்மாக் ஊழியா்களை பணி நிரந்தரம்; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை தனி முகமை மூலம் அமல்படுத்த வேண்டும்; டாஸ்மாக் ஊழியா்களின் ஓய்வு வயதை 60-ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.26-ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் முடிவு செய்துள்ளனா்.
இதேபோல, பிப்ரவரி முதல் வாரத்தில் மாவட்ட அளவிலான வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை நடத்துவது, பிப்.2-ஆவது வாரத்தில் மண்டல அளவிலான வேலைநிறுத்த மாநாட்டை நடத்துவது, இடைப்பட்ட காலத்தில் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு அனைத்துக் கட்சித் தலைவா்களை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

