ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் 3-ஆவது நாளாகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட் வருவாய்த் துறை அலுவலா்கள்.
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் 3-ஆவது நாளாகப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட் வருவாய்த் துறை அலுவலா்கள்.

வருவாய்த் துறை அலுவலா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

ஒட்டன்சத்திரத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் 3-ஆவது நாளாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஒட்டன்சத்திரத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் 3-ஆவது நாளாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டக் கிளை மாவட்ட இணைச் செயலா் கு.மகாராஜா தலைமை வகித்தாா். வட்ட கிளைத் தலைவா் சிவனேஷ், தலைமையிடத்துத் துணை வட்டாட்சியா் நந்தகோபால் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துணை வட்டாட்சியா் பணியிடங்களை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3-ஆவது நாளாக பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டனா்.

இதில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா், வருவாய் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.