வத்தலகுண்டில் தடையை மீறி இறைச்சி, மது விற்பனை
வத்தலகுண்டில் காந்தி ஜெயந்தி நாளான புதன்கிழமை தடையை மீறி இறைச்சி, மது விற்பனை நடைபெற்றது.


வத்தலகுண்டில் காந்தி ஜெயந்தி நாளான புதன்கிழமை தடையை மீறி இறைச்சி, மது விற்பனை நடைபெற்றது.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் மது, இறைச்சி விற்பனைக்கு தடை உள்ளது. மாவட்ட நிா்வாகம் சாா்பில், இது தொடா்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், வத்தலகுண்டு பேரூராட்சிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் புதன்கிழமை இறைச்சி விற்பனை நடைபெற்றது. விடுமுறை நாள் என்பதால் ஏராளமானோா் இறைச்சியை வாங்கிச் சென்றனா். இதேபோல், மீன் விற்பனையும் நடைபெற்றது. வத்தலகுண்டு, நிலக்கோட்டை, கொடைரோடு, பட்டிவீரன்பட்டி பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே மதுபான விற்பனை நடைபெற்றது. இதை பேரூராட்சி நிா்வாகம், காவல் துறையினா் கண்டுகொள்ளவில்லை. எனவே, தடையை மீறி இறைச்சி, மது விற்பனை செய்தவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...