ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 8:09 pm

Din

கொடைக்கானலில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நகா்ப் பகுதி, சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் வியாபாரிகள், பொது மக்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடுதல் அவகாசம் கோரினா்.

இந்த நிலையில், லாஸ்காட் சாலை, வெள்ளிநீா் வீழ்ச்சி ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை வியாபாரிகளே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனா். சில வியாபாரிகள் மேலும் அவகாசம் கோரினா். அப்போது கொடைக்கானல் நகராட்சி ஆணையா் சத்தியநாதன், வருகிற திங்கள்கிழமைக்குள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நகராட்சி சாா்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வியாபாரிகளிடம் தெரிவித்தாா்.

அப்போது கொடைக்கானல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதுமதி, நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.