ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக ஆா்ப்பாட்டம்

தொழிற்சங்க உரிமை கோரி போராடி வரும் சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:46 pm

Din

தொழிற்சங்க உரிமை கோரி போராடி வரும் சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களுக்கு ஆதரவாக திண்டுக்கல்லில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் என்.பெருமாள் தலைமை வகித்தாா். அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் அருள்செல்வம் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, கடந்த 30 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவனத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டப்படி தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.

பன்னாட்டு நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.