ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டன ஆா்ப்பாட்டம்

பழனி அருகே தூய்மைப் பணியாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 8:46 pm

Din

பழனி அருகே தூய்மைப் பணியாளா் தாக்கப்பட்டதைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழனியை அடுத்த கீரனூா் பேரூராட்சியில் கவிதா என்பவா் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

இவா் தனிநபா் ஒருவரிடம் கடன் வாங்கியதற்காக அண்மையில் சிலரால் தாக்கப்பட்டாா். இதைக் கண்டித்து புதன்கிழமை கீரனூா் பேருந்து நிலையம் முன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் துணைத் தலைவா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் முத்துசாமி, மாவட்டச் செயலா் கலைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலா் கனகு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது தூய்மைப் பணியாளரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கீரனூா் பகுதியில் அதிகரித்து வரும் கந்து வட்டிக் கொடுமையை போலீஸாா் கண்காணிக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் மோகனா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் சின்னதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க ஒன்றியச் செயலா் பழனிச்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.