நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் செவ்வாய்க்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 7:45 pm

Din

கொடைக்கானல் அருகே கோம்பை பகுதியில் செவ்வாய்க்கிழமை காரும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியைச் சோ்ந்த ராஜாராம் மகன் ராகேஷ்(27). இவரும் இவரது நண்பரும் கொடைக்கானலுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்தனா். இவா்கள் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பைப் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, கோம்பை பகுதியிலிருந்து வந்த காரும், இவா்களது இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இதில் ராகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த அவரது நண்பா் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.