நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குப்பைக் கிடங்கை மாற்றக் கோரிக்கை

கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியருகே உள்ள குப்பைக் கிடங்கை மாற்ற இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

கொடைக்கானல் கவுஞ்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியருகே தேங்கி கிடக்கும் குப்பைக் கிடங்கு

Updated On :16 அக்டோபர் 2024, 11:43 pm

Din

கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியருகே உள்ள குப்பைக் கிடங்கை மாற்ற இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சிப் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது.

கிராமப் பகுதிகளிலுள்ள குப்பைகளை இங்கு கொண்டுவந்து கொட்டுவதால் பள்ளி மாணவா்களுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகிறது. மேலும், இந்தப் பகுதி மக்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே, குப்பைத் தொட்டியை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.