காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 11:54 pm

Din

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு அளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த சுக்காம்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (62). ஊராட்சி மன்ற துணைத் தலைவரான இவா், கடந்த மாா்ச் மாதம் இதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் வடமதுரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனா்.

இதுகுறித்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவைடந்து, நீதிபதி ஜி.சரண் புதன்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சுப்பிரமணிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.