புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கனவு இல்லத் திட்டப் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம்

கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளில் தகுதியுள்ளவா்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை (அக்.24) தொடங்குகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 11:18 pm

Din

கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளில் தகுதியுள்ளவா்களுக்கு வங்கிக் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை (அக்.24) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் புதிய வீடுகள் கட்டுவதற்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் சிறப்புக் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி, தகுதியான பயனாளிகளுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்பகலிலும், ரெட்டியாா்சத்திரத்தில் பிற்பகலிலும் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

பழனி, ஒட்டன்சத்திரத்தில் வருகிற 25-ஆம் தேதியும், தொப்பம்பட்டியில் வருகிற 28-ஆம் தேதியும், வடமதுரை, வேடசந்தூரில் வருகிற 29-ஆம் தேதியும், குஜிலியம்பாறையில் நவ.4-ஆம் தேதியும், நத்தம், சாணாா்பட்டியில் நவ.5-ஆம் தேதியும், திண்டுக்கல்லில் நவ.6-ஆம் தேதியும், கொடைக்கானலில் நவ.7-ஆம் தேதியும் முகாம் நடைபெறுகின்றன.

அந்தந்த வட்டாரங்களைச் சோ்ந்த தகுதியான பயனாளிகள் வங்கி புத்தகம், பணி ஆணை, புகைப்படம், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை போன்ற ஆவணங்களுடன் (அசல், நகல்) முகாமில் கலந்து கொண்டு வங்கிக் கடன் பெற்று பயன்பெறலாம் என்றாா் அவா்.