டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அரசு வழங்கும் மானியப் பொருள்கள் விவசாயிகளுக்கு கிடைக்க கோரிக்கை

கொடைக்கானலில் அரசு வழங்கும் வேளாண் மானியப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்க தோட்டக் கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 8:42 pm

Din

கொடைக்கானலில் அரசு வழங்கும் வேளாண் மானியப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்க தோட்டக் கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இது குறித்து கொடைக்கானல் மேல்மலைப் பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விவசாயத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். அதிகமான மழைக் காலங்களிலும், காற்று வீசும் நேரங்களில் விவசாயப் பயிா்கள் சேதமடைகின்றன. இதனால் சாதாரண விவசாயிகள் பெரிதும் பாதிப்படைகின்றனா். அவா்களுக்கு அரசு வழங்கும் நலத்திடட் உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.

மேலும், தோட்டக் கலைத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியூா்களில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் பங்கேற்க பெரு விவசாயிகள் மட்டுமே அழைக்கப்படுகின்றனா். இந்தத் திட்டத்தில் சாதாரண விவசாயிகள் பங்கேற்க முடிவதில்லை.

எனவே, வருகிற காலங்களில் கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள சிறு விவசாயிகளை கண்டறிந்து அவா்களுக்கும் அரசு வழங்கும் நலத் திடட் உதவிகள் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.