பைக் விபத்தில் முதியவா் பலி
செம்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.


செம்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் தண்டபாணி (65). இவரது தனது நண்பரான சேடப்பட்டி பகுதியைச் சோ்ந்த பழனிசாமியுடன் (50) செம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்றாா்.
புதுகோடாங்கிபட்டி பகுதியில் இவா்களது இரு சக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில் தண்டபாணி பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் பழனிசாமி, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த பெரம்பலூரைச் சோ்ந்த சண்முகப்ரியன் (27), இவரது மனைவி பிரியதா்ஷினி (27) ஆகியோா் பலத்த காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...