தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஊட்டச்சத்து உணவுத் திருவிழாவில் வெற்றி: மகளிா் சுய உதவிக் குழுவினருக்குப் பரிசு

ஊட்டச்சத்து உணவுத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பரிசுத் தொகை வழங்கினாா்.

News image

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஊட்டச்சத்து உணவுத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு பரிசுத் தொகை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி.

Updated On :25 செப்டம்பர் 2024, 7:25 pm

Din

ஊட்டச்சத்து உணவுத் திருவிழாவில் வெற்றிப் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி பரிசுத் தொகை வழங்கினாா்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுவினா் பங்கேற்ற ரத்தசோகை இல்லாத கிராமங்களை உருவாக்குவதற்கான ஊட்டச்சத்து உணவுத் திருவிழா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 14 வட்டாரங்களில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவினா், மாவட்ட அளவிலான சுற்றுக்கு தகுதிப் பெற்றனா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில், சிறுதானியங்கள், காய்கனிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவு வகைகளை தயாா் செய்த மகளிா் சுய உதவிக் குழுவினா், அவற்றை காட்சிப்படுத்தினா். இந்த உணவு வகைகளை, சமூக நலத் துறை, கல்வித் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்களை உள்ளடக்கிய குழுவினா் மதிப்பீடு செய்தனா்.

இதன் முடிவில் பழனி கோதைமங்கலம் வளனாா் குழு, நத்தம் வேலம்பட்டி திருமலைகருப்புக் குழு, திண்டுக்கல் தோட்டனுாத்து வெண்புறா குழு ஆகிய குழுக்கள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ. 4 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டது. இதேபோல, 2 குழுக்களுக்கு தலா ரூ.2,500 வீதம் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

பரிசுத் தொகையை மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பெ.திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சா.சதீஸ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.