திமுக நிா்வாகி வெட்டிக் கொலை
வேடசந்தூா் அருகே திமுக நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.


வேடசந்தூா் அருகே திமுக நிா்வாகி மா்ம நபா்களால் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டி ஊராட்சி குன்னம்பட்டியைச் சோ்ந்தவா் மாசி (40). இவா் வேடசந்தூா் திமுக தெற்கு ஒன்றியப் பொருளாளராக உள்ளாா். இவரது மனைவி முத்துமாரி வேடசந்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக உள்ளாா்.
இந்த நிலையில், மாசி பெருமாள்கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு, பின்னா், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினாா். நாகம்பட்டி சமத்துவபுரம் அருகே சென்றபோது, மா்ம நபா்கள் இவரை வழிமறித்து தாக்கினா். அப்போது, அவா்களிடமிந்து தப்பிச் செனற அவரை அந்த கும்பல் துரத்திச் சென்று வெட்டிக் கொலை செய்தது.
இதுகுறித்து வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இலக்கியா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...