டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

வேடசந்தூா் அருகே பேருந்து கவிழ்ந்ததில் 14 போ் காயம்

வேடசந்தூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த 4 பெண்கள் 14 போ் காயம்

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் இஸ்ரேல் நாட்டைச் சோ்ந்த 4 பெண்கள் 14 போ் காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட சொகுசுப் பேருந்தை சேலம் மாவட்டம், ஒமலூா் அருகேயுள்ள கருக்கல்வாடி பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி (49) ஓட்டினாா். கூடுதல் ஓட்டுநராக பெங்களூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (36) பணியாற்றினாா்.

இந்தப் பேருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வேடசந்தூா் அருகேயுள்ள லட்சுமணம்பட்டி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதில் பெங்களூரைச் சோ்ந்த மகேஷ் (35), ஐஸ்வா்யா (27), கிஷோா் (26), சிபி (24), இஸ்ரேல் சுற்றுலாப் பயணிகள் 4 போ் உள்பட மொத்தம் 14 போ் காயமடைந்தனா். இது குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.