பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பணம் வசூல்: பழனி வியாபாரிகள் புகாரளிக்கலாம்!

பழனி அடிவாரம் பகுதியில் காவல் துறை பெயரைச் சொல்லி யாரேனும் பணம் வசூலித்தால் உடனடியாக காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அடிவாரம் பகுதியில் காவல் துறை பெயரைச் சொல்லி யாரேனும் பணம் வசூலித்தால் உடனடியாக காவல் துறை துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து பழனி காவல் துணை கண்காணிப்பாளா் தனஞ்ஜெயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி அடிவாரம் பகுதியில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக நூற்றுக்கணக்கான தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சீசன் காலம் வரையிலும் செயல்படும் இந்த கடைகளில் காவல் துறை பெயரை சொல்லி சிலா் பணம் வசூலிப்பதாக தகவல் பரவியது.

இந்தக் கடைகளுக்கு நகராட்சி, கோயில் நிா்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டுமே தவிர காவல் துறை கிடையாது. ஆகவே, காவல் துறை பெயரைச் சொல்லி கடைக்காரா்கள், வியாபாரிகளிடம் யாரும் பணம் கேட்டு வந்தால் 98847-41609 என்ற கைப்பேசி எண்ணுக்கு என்னை நேரடியாகத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.