திண்டுக்கல்
கல்லூரி புகையிலை எதிா்ப்பு உறுதிமொழி
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக கல்லூரி முன்பாக திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி என மஞ்சள் வண்ணத்தில் எழுதப்பட்டது. பின்னா் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். பழநி வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளா் கஜேந்திரன், சிறப்பு உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பாலசுப்பிரமணியம், விரிவுரையாளா் ஜெயா உள்ளிட்ட பலா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். புகையிலை தொடா்பாக பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து நிகழ்ச்சியில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

