வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரயிலில் 5.7 கிலோ கஞ்சா மீட்பு

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோவையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கோவையிலிருந்து வந்த விரைவு ரயிலில் 5.7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

கோவையிலிருந்து நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35-க்கு வந்தது. இந்த ரயிலில், திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, ஒரு பெட்டியிலிருந்த பைகளில் 5.7 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதனை மீட்ட போலீஸாா், திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.