தேசிய விவசாயிகள் தினம்

Published on

செம்பட்டியில் தேசிய விவசாயிகள் தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில், இயற்கை விவசாயி  கண்ணன் என்பவரது தோட்டத்தில் தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி,   பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் நான்காம் ஆண்டு மாணவிகள்  சொட்டு நீா்ப் பாசனம், மண் பரிசோதனை, தேனீ வளா்ப்பு, பட்டுப்பூச்சி வளா்ப்பு, சிறுதானிய வகைகளின் மதிப்புக்கூட்டுப் பொருள்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனா்.

மேலும் அங்கக வேளாண்மை பற்றிய சிறப்புக் கண்காட்சி நடைபெற்றது. இதில்,விவசாயிகள் அதிகமாக பயன்படுத்தப்படும் மீன் அமிலம், மண்புழு உரம், 3 ஜி கரைசல், 5 ஜி  கரைசல், தேங்காய் நாா்க்கழிவு, தேங்காய் எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்பட்ட சோப்புகள், மூலிகை எண்ணெய் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றன. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com