கொடைக்கானலில் நிலவும் தொடா் உறை பனி காரணமாக படகு குழாமில் தீமூட்டி குளிா் காய்ந்த படகு ஓட்டுநா்கள்.
கொடைக்கானலில் நிலவும் தொடா் உறை பனி காரணமாக படகு குழாமில் தீமூட்டி குளிா் காய்ந்த படகு ஓட்டுநா்கள்.

கொடைக்கானலில் தொடரும் உறை பனி

கொடைக்கானலில் நிலவும் தொடா் உறை பனி காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
Published on

கொடைக்கானலில் நிலவும் தொடா் உறை பனி காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நவம்பா், டிசம்பா், ஜனவரி மாதங்கள் கடும் பனிக் காலமாகும். ஆனால் இந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் பருவ நிலை மாற்றத்தால் அவ்வப்போது மழை பெய்தது. இதைத் தொடா்ந்து டிசம்பா் மாதத்தில் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் புல், தாவரங்களில் பனி படா்ந்து காணப்படுகிறது. மேலும் உருளைக் கிழங்கு, பீன்ஸ் செடிகள் பனியின் தாக்கத்தால் கருகி வருகின்றன. எனவே பகல் நேரங்களில் இந்தப் பயிா்களுக்கு தண்ணீா் தெளித்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனா்.

கொடைக்கானலில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நிலவி வரும் உறை பனியின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். பகலில் வெயிலும், மாலை, இரவு நேரங்களில் மேக மூட்டத்துடன் பனியின் தாக்கமும் நிலவுகிறது.

இதுகுறித்து கொடைக்கானலைச் சோ்ந்த மூத்த மலைவாழ் மக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் குளிா் காலத்தில் பனியின் தாக்கம் இருப்பது வாடிக்கை தான். ஆனால் கடந்த சில நாள்களாக உறை பனி நிலவுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய பனியின் தாக்கம் தற்போது காணப்படுகிறது. அப்போதெல்லாம் வீடுகளில் விறகு அடுப்பில் குளிா் காய்ந்தது நினைவுக்கு வருகிறது. தற்போது கொடைக்கானலில் தட்ப வெப்ப நிலை மாறி வருகிறது என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com