திண்டுக்கல்
ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயம்
பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.
பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய தாராபுரம் சாலையில் 8 பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. இந்த ஆட்டோவை குணசேகரன் (57) ஓட்டினாா். வளைவு ஒன்றில் ஆட்டோ திருப்பும்போது கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 8 மாணவா்களும் காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் காயமடைந்த மாணவா்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்தில் வட்டாட்சியா் பிரசன்னா நேரில் ஆய்வு செய்தாா்.
