பழனி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா்.
பழனி அருகே கோதைமங்கலத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செந்தில்குமாா் (49). இவா் பழனி கான்வென்ட் சாலையில் வண்ண மீன்கள், வீட்டு விலங்குகள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை வீட்டில் மின் பழுது ஏற்பட்டதையடுத்து அதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
