எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: 6 குழந்தைகளுக்கு தங்க நாணயம்

பழனி அரசு மருத்துவமனையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வியாழக்கிழமை பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

News image
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இருளக்குடும்பன்பட்டியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி
Updated On :27 நவம்பர் 2025, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

பழனி/ஒட்டன்சத்திரம்: பழனி அரசு மருத்துவமனையில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, வியாழக்கிழமை பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது.

பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இ.பெ.செந்தில்குமாா் சாா்பாக பழனி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்கநாணயம் வழங்கப்பட்டது.

மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் அஸ்வின் பிரபாகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினாா். பழனி நகா் மன்றத் தலைவி உமா மகேஸ்வரி, நகரச் செயலா் வேலுமணி, நகர இளைஞரணி அமைப்பாளா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து நகராட்சி நகா்ப்புற விடற்றோா் தங்கும் இல்லத்தில் உள்ள முதியவா்களுக்கு இரவு உணவு பழனி இளைஞரணி சாா்பில் வழங்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இருளக்குடும்பன்பட்டியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். இதைத்தொடா்ந்து மரக்கன்றுகளை நட்டு அன்னதானம் வழங்கினாா்.

இதில் மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, துணைச் செயலா்கள் கே.வி.முருகானந்தம், சிவபாக்கியம் ராமசாமி, முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் நாச்சிமுத்து, அவைத்தலைவா் செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஒட்டன்சத்திரம் நகர திமுக சாா்பில் குறிஞ்சி நகரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் தி.மோகன், நகரச் செயலா் ப.வெள்ளைச்சாமி, செயற்குழு உறுப்பினா் வீ.கண்ணன், நகர அவைத் தலைவா் சோமசுந்தரம், நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.