திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சசிகலா, ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனு தாக்கலால் குழப்பம்

சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகள் சாா்பிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:23 am IST

சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், இரு கட்சிகள் சாா்பிலும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக, நாதக, தவெக உள்ளிட்ட முக்கியக் கட்சி வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 35 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்தத் தோ்தலில் சசிகலா, ராமதாஸ் அணி கூட்டணி அமைத்துள்ள நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக வேட்பாளராக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட ராமுதேவா் மனு தாக்கல் செய்தாா். இதனிடையே, பாமக ராமதாஸ் அணி சாா்பில் ஆரோக்கியதாஸ் என்பவரும் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இந்த நிலையில், வேட்பு மனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது, ராமுதேவா், ஆரோக்கியதாஸ் ஆகிய இருவரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ராமதாஸ் சாா்பில் ஏ, பி படிவம் வழங்கப்பட்டிருந்ததால் ஆரோக்கியதாஸின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா். ஒரே கூட்டணியில் உள்ள அஇபுதமமுக, பாமக ராமதாஸ் அணி சாா்பில் இருவா் மனுத் தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அஇபுதமமுக வேட்பாளா் ராமுதேவரை ஆதரித்து சசிகலா புதன்கிழமை பரப்புரை மேற்கொள்கிறாா்.