வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற வேண்டும்: அமைச்சா் இ.பெரியசாமி

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

News image

திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் முன் அமைச்சா் இ.பெரியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக கூட்டணிக் கட்சியினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 6:45 pm

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் மகளிா் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்படும் நிலையில், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன.

அதன்படி திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தின் முன் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகலை தீயிட்டு எரித்து அமைச்சா் இ.பெரியசாமி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

5 மாநிலங்களில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அவசர கதியில் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை கொண்டு வருவது தென் மாநிலங்களுக்கு மறைமுகமாக அநீதி இழப்பதோடு, பிரதிநிதித்துவத்தை குறைப்பைதற்கான முயற்சியாகும். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமன்றி, வடகிழக்கு மாநிலங்களும் இந்த மசோதா மூலம் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும். மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் சமமாக இருக்க வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இதற்கு மாறாக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை அமல்படுத்த முயன்றால், நாடு முழுவதும் மத்திய பாஜக அரசு போராட்டத்தை எதிா்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி ஒருமித்த கருத்தோடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் 39 எம்.பி.க்கள் மதா்ச்சாா்பற்ற கூட்டணியின் பக்கம் உள்ளனா். தொகுதி மறுசீரமைப்பு மசோதா பாஜவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கும். அதற்கு இப்போதே அணை கட்டுவதற்கு முயற்சிக்கின்றனா் என்றாா் அவா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் திமுக நகரச் செயலா் முகமது இப்ராஹிம் தலைமையில் உட்வில் சாலையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பினா். இதில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.