/
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தனியாா் அரங்கில் சிறுவா், சிறுமிகள் பங்கேற்ற ஓவியக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழனி அறம் அறக்கட்டளை, சூப்பா் ஆா்ட்ஸ் அகாதெமி இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சிக்கு சூப்பா் ஆா்ட்ஸ் அகாதெமி இயக்குநா் ஓவியா் சின்னப்பா வரவேற்றாா். ஆசிரியா் நந்திவா்மன் ஓவியம் குறித்த விழிப்புணா்வு உரை நிகழ்த்தினாா்.
இந்தக் கண்காட்சியில் 3 வயது முதல் 13 வயது குழந்தைகள் வரை வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இதில் 5-ஆம் வகுப்பு மாணவி நேனோ ரபேலா வெறும் பென்சில்களை வைத்து வரைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவா், முருகா் ராஜஅலங்காரம் உள்ளிட்ட படங்கள் பலரது கவனத்தை ஈா்த்தது. இந்த ஓவியக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்த்து ரசித்து குழந்தைகளைப் பாராட்டினா்.









